ஒன்பது ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள ஒன்பது ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் மே 1ம் தேதி நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, சின்னதடாகம், சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, குருடம்பாளையம், அசோகபுரம், நாயக்கன்பாளையம், பிளிச்சி உள்ளிட்ட, 9 ஊராட்சிகளில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றன. மேலும், அடிப்படை வசதிகள், குடிநீர் தட்டுப்பாடு போக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என, அந்தந்த ஊராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.