நாகை கலெக்டர் சேம்பர் முன் குடும்பமே படுத்து போராட்டம்

நாகப்பட்டினம் நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த செட்டிப்புலத்தை சேர்ந்தவர் வீரக்குமார், 45; மலேஷியாவில் வேலை பார்த்து வந்தார். செட்டிப்புலத்தில் சுகாதார நிலையம் கட்ட, 2020ல் வீரக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தை, ஊராட்சி தலைவர் கலா மூன்று பிரிவுகளாக வீரக்குமார் தந்தை ராஜமாணிக்கத்திடம் பத்திரப்பதிவு செய்து பெற்றார்.
இந்நிலையில், 2023ல் ஊர் திரும்பிய வீரக்குமார், சொந்த ஊரில் கடை வைக்க குறிப்பிட்ட இடத்தில் மீதமுள்ள, 2.50 சென்ட் நிலத்திற்கு வில்லங்க சான்றிதழ் பெற்ற போது, 2.50 சென்ட் நிலத்தையும் சேர்த்து அபகரித்து பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது.
கலெக்டர், எஸ்.பி., என அனைத்து துறையினரிடம் மனு அளித்துள்ளார். வருவாய் துறையினர் விசாரணைக்கு பின், ஏப்., 5ம் தேதி, வீரக்குமாரிடம், 2.50 சென்ட் நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றால் நாகைக்கும், வேதாரண்யத்திற்கும் அலைய வைப்பதாக கூறி, வீரக்குமார், தந்தை, தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு முறையிட வந்தார்.
கலெக்டர் சேம்பர் வாயிலில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும்
-
வேலூர் மயானத்தில் உடலை எரிக்காமல் நாடகமாடிய ஊழியர்: உறவினர்கள் வாக்குவாதம்
-
பாகிஸ்தானுக்கு பதிலடிக்கு தர தயாராகும் இந்தியா; மோடி தலைமையில் ஆலோசனை
-
ரூ.2,500 லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் மூவர் சிக்கினர்!
-
கல்வியை நவீனப்படுத்தும் மத்திய அரசு : பிரதமர் மோடி பெருமிதம்
-
தாயை கொன்ற வழக்கில் வாலிபர் தஷ்வந்த் விடுதலை
-
ரீல்ஸ் மோகத்தில் சேட்டை; கோவிலில் வீடியோ எடுத்தவர்கள் மீது போலீசில் புகார்!