விட்டு சென்ற தாயை கொன்ற மகன் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை எஸ்.எம்.எஸ்., கார்டன் நகரை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா, 40. இவர்களின் மகன்கள் அருண்குமார், 18, அன்புக்கரசன், 15. மகள் ஐஸ்வர்யா, 10.
தம்பதி இடையே சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மயிலாடுதுறை மாவட்டம், அஞ்சாறு வார்த்தலையில் உள்ள தன் தாய் வீட்டுக்கு, மகளுடன் பிருந்தா சென்றார். மகன்கள் இருவரும் தந்தையுடன் இருந்தனர்.
இந்நிலையில், திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற பெண்ணை, நான்கு ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் ஸ்டாலின் இறந்தார்.
இதனால் தன் மகன்களுடன் வாழ முடிவெடுத்த பிருந்தா, மகள் ஐஸ்வர்யாவுடன், ஆடுதுறைக்கு வந்தார். அப்போது, 'சிறு வயதில் எங்களை ஏன் விட்டு சென்றீர்கள். தற்போது ஏன் வந்துள்ளீர்கள்?' எனக்கேட்டு, அருண்குமார் வாக்குவாதம் செய்து, வீட்டிலிருந்த கடப்பாரையால், தாயின் தலையில் அடித்தார்.
சம்பவ இடத்திலேயே பிருந்தா உயிரிழந்தார். திருவிடைமருதுார் போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.
மேலும்
-
வேலூர் மயானத்தில் உடலை எரிக்காமல் நாடகமாடிய ஊழியர்: உறவினர்கள் வாக்குவாதம்
-
பாகிஸ்தானுக்கு பதிலடிக்கு தர தயாராகும் இந்தியா; மோடி தலைமையில் ஆலோசனை
-
ரூ.2,500 லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் மூவர் சிக்கினர்!
-
கல்வியை நவீனப்படுத்தும் மத்திய அரசு : பிரதமர் மோடி பெருமிதம்
-
தாயை கொன்ற வழக்கில் வாலிபர் தஷ்வந்த் விடுதலை
-
ரீல்ஸ் மோகத்தில் சேட்டை; கோவிலில் வீடியோ எடுத்தவர்கள் மீது போலீசில் புகார்!