முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி

நத்தம்: சிறுகுடி லெட்சுமிபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா ஏப்.20-ல் அம்மன் குளத்தில் தீர்த்தம் அழைத்து வர காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைதொடர்ந்து கரகம் அம்மன் குளத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு, அலகுவேல், பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து கரகம் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement