குழந்தை இல்லாததால் இளைஞர் தற்கொலை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே குழந்தை இல்லாத மன விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அருகே ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கார்த்திக்,27; அரசு போக்குவரத்து கழக தற்காலிக கண்டெக்டர். திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக், நேற்று தனது வீட்டு மேல்தள அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement