கமிஷனர் முற்றுகை

திருமுருகன்பூண்டி நகராட்சியில் பல்வேறு பணிகளில், லஞ்சம் பெற்று முறைகேடு நடந்துள்ளதாக கூறி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பால்ராஜை முற்றுகையிட்டு, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பா.ஜ., மண்டல தலைவர் சண்முகபாபு கூறுகையில், ''22-வது வார்டில் புதிய மனை பிரிவுக்கு வடிகால் வசதி செய்யாமலே கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் வீட்டுமனைகளை விற்க பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டு அனுமதி கொடுத்துள்ளனர். இதற்கு கமிஷனரும் உடந்தையாக இருந்துள்ளார். 18வது வார்டில் புதிய வீட்டுமனை பிரிவுக்கு, நீர்வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. அம்ரூத் திட்டத்தில் நகராட்சி பூங்கா பராமரிப்பிற்காக டெண்டர் விடப்பட்டது. அந்த நிதியை முறைகேடாக கவுன்சிலர் குழுவே கைப்பற்றிக் கொண்டது. இதனை கண்டித்து போராட்டம் நடத்தினோம்,'' என்றார்.

வார்டு கவுன்சிலர் பார்வதி, பொது செயலாளர்கள் சதாசிவம், சிவகுமார், மண்டல பொருளாளர் மனோகரன், துணை தலைவர்கள் மதியழகன், அன்பு ராணி, நகரச் செயலாளர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement