திருப்பூர் மாவட்டத்தில் நீதிபதிகள் இடமாற்றம்

திருப்பூர், ; மாவட்ட நீதிபதிகள் இடமாறுதலையடுத்து, சீனியர் சிவில் நீதிபதிகள் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஐகோர்ட் பதிவாளர் அல்லி நேற்று பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும், 117 சீனியர் நீதிபதிகள், தற்போது பணியாற்றும் இடங்களிலிருந்து வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் துறை சார்ந்த வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டனர். அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளராகப் பணியாற்றிய ஷபீனா, சத்தியமங்கலம் சார்பு நீதிபதி ஆக மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல் உடுமலை சார்பு நீதிபதி மணிகண்டன், பொள்ளாச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வரும் மோகனவல்லி திருப்பூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டன்சத்திரம் சார்பு நீதிபதி தனபால் உடுமலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement