பிரிமீயர் லீக் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் கோல்கட்டா அணி வெற்றி

புதுடில்லி: பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கோல்கட்டா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
.

பிரீமியர் லீக் -2025 டி20 தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 48வது லீக் போட்டியில் டில்லி அணியும், கோல்கட்டா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டில்லி அணி,பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.க்ஷ


இதையடுத்து, பேட்டிங் செய்ய களம் இறங்கிய கோல்கட்டா அணியில் துவக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

பவர் ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது.

12 பந்துகளில் 26 ரன்கள் அடித்த குர்பாஸ் ஸ்டார்க் பந்தில் விக்கெட் இழந்தார்.

அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்:

அடுத்து சுனில் நரைன் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து நிகம் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் ரஹானே , 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தபோது அக்ஷர் பட்டேல் பந்தில் அவுட் ஆனார், தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், அக்ஷர் பட்டேல் பந்தில் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி நிலைத்து ஆடி, 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து சமீரா பந்தில் ஆட்டமிழந்தார்.


அடுத்து வந்த ரிங்கு சிங், அதிரடியாக 25 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து நிகம் பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் கோல்கட்டா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது.

டில்லி அணியின் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். நிகம், அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதனையடுத்து 205 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய டில்லி அணியில் அபிஷேக் போரல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த விக்கெட்டாக கருண்நாயர் 15 ரன்களிலும், கே.எல். 7 ரன்களிலும், அக்சார் பட்டேல் 43 ரன்களிலும் ஸ்ரிடாடன் ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 15 -வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் இருந்த நிலையில் அதிரடியாக ஆடிய டூப்ளசி 62 ரன்களில் அவுட்டாகி 6-வது விக்கெட்டாக வெளியேறினார். விப்ராஜ் நிஹாம் 30ரன்களிலும் அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் டில்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது.

கோல்கட்டா அணியில் சுனில் நரையன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement