மாநகராட்சி அலுவலர்களுக்கு கோயிலில் கிடா விருந்து

திண்டுக்கல்; வரி வசூலில் இலக்கை எட்டி மத்திய நிதிக்குழுவின் மானியத்தை உறுதி செய்ததால் மாநகராட்சி ஊழியர்களுக்கு கோயிலில் கிடா வெட்டி விருந்தளிக்கப்பட்டது.

சொத்து வரியை மட்டும் நிலுவையின்றி வசூலிக்க வேண்டும் என்பதற்காக மத்திய நிதிக்குழு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியத் தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022--23ம் ஆண்டு வசூலிக்கப்பட்ட வரியை விட 2023--24 ல் 115 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை எட்டியதால் ரூ.10 கோடி ஊக்கத் தொகை பெறுவதற்கான வாய்ப்பு திண்டுக்கல் மாநகராட்சிக்கு கிடைத்தது.இதேபோல் நடப்பு நிதியாண்டிலும் 111.5 சதவீத கூடுதல் தொகை வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்க அரசியல்வாதிகள் நெருக்கடிக்கடியிலும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் தீவிர வரி வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டு இலக்கை பூர்த்தி செய்து மத்திய நிதிக்குழுவின் மானியம் ரூ.10 கோடி கிடைப்பதையும் உறுதி செய்தனர். இதனால் மாநகராட்சி அலுவலர்களுக்கு புறநகர் வத்தலகுண்டு ரோட்டில் உள்ள சந்தன கருப்புசுவாமி கோயிலில் கிடா வெட்டி விருந்தளிக்கப்பட்டது.

Advertisement