குடிநீரில் சாக்கடை நீரால் நோய் தொற்று; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்
பழநி; பழநி நகராட்சி பகுதியில் சப்ளையாகும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் நோய் தொற்று அபாயத்தில் மக்கள் உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
பழநி நகராட்சி கூட்டம் தலைவர் உமா மகேஸ்வரி(தி.மு.க.,) தலைமையில் நடைபெற்றது. நகர் நல அலுவலர் மனோஜ் குமார், நகராட்சி பொறியாளர் ராஜவேலு முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம்
தீனதயாளன் (தி.மு.க.,): சமீபத்தில் பெய்த மழையால் பிளக்ஸ் சரிந்து விழுந்துள்ளது.பிளக்ஸ் வைப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
தலைவர்: தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
நடராஜ் (அ.தி.மு.க.,): 85 பேருக்கு இலவச பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டதில் 13 பேருக்கு மட்டுமே பரிசிலனை செய்யப்படுகிறது.
தலைவர் : பட்டா வழங்குவது நகராட்சி அதிகாரத்தில் இல்லை.
நடராஜ் (அ.தி.மு.க.,): சாக்கடை நீர் மழையால் சாலையில் ஓடி சுகாதார கேடு ஏற்படுகிறது.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்
செபாஸ்டின் (தி.மு.க.,): பாதாள சாக்கடை திட்டம் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் சாக்கடை பணிகள் நடைபெறும்போது குடிநீர் குழாய் சேதமடைகிறது. இதனை உடனடியாக சரி செய்வதில்லை .அப்படி சரி செய்தாலும் மீண்டும் பழுதாகிறது. அங்குள்ள ஊழியர்களுக்கு தெரிவிக்கும் போது அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை .மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம்.
தலைவர்: பாதாள சாக்கடை திட்டம் நடைபெறுவதில் கருத்துக்களை பரிமாற உதவியாளரை நியமிக்கலாம்.
செபாஸ்டின் (தி.மு.க.,): காந்தி மார்க்கெட் கட்டடங்கள் எப்போது நிறைவு பெறும்.
பொறியாளர்: மூன்று மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.
பத்மினி (காங்., ): வரி வசூலிக்கவும் அளவீடு செய்யவும் புதிய நபர்களை அனுப்பி உள்ளனர். அவர்களுக்கு உரிமையாளர்கள் குறித்து தெரிவதில்லை.
தலைவர்: புதிய நபர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்மினி (காங்.,): சொத்து வரி வசூலிக்கும் நபர்களால் இடையூறு ஏற்படுகிறது.
தலைவர்: விரைவில் சரி செய்யப்படும்
தீனதயாளன் (தி.மு.க.,): சொத்து வரி வசூலிக்க கியூ ஆர் கோடு, ஜிபே முறையை பின்பற்ற வேண்டும்.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகேசன் (வி.சி.க.,): நகராட்சி பகுதியில் உள்ள விடுதிகள் முறையாக நடைபெறுகிறதா .பஸ் ஸ்டாண்ட் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
சுரேஷ் (தி.மு.க.,): குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது .இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உயிர் இழப்புகள் ஏற்படும் சூழல் கூட ஏற்படும்.
தலைவர்: குடிநீரில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது .அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சாக்கடை கலந்து வரும் குடிநீர் பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் தேவைப்படும் எனில் நானே நேரில் வந்து ஆய்வு செய்கிறேன்.
சுரேஷ் (தி.மு.க.,): குடிநீர் குழாய் இல்லாத வீடுகளுக்கு குடிநீர் வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தலைவர்: விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சுதா (தி.மு.க.,): பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பஸ் நிற்கும் ரேக்குகளுக்கு அருகே கடைக்காரர்கள் அசுத்தம் செய்து வருகின்றனர். மேற்கு பகுதியில் விளக்குகள் சரிவர எரிவதில்லை.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது
மேலும்
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
-
மாநகராட்சி பெண் ஊழியர் லாரி மோதி பலி
-
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: நீதிபதி திட்டவட்டம்