பலவீனப்படுத்தும் காங்கிரஸ்!

பயங்கரவாத தாக்குதல் நடந்து, அரசு அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வரும் நேரத்தில், பொறுப்பேற்க வேண்டிய பிரதமரை காணவில்லை என, காங்கிரஸ் பதிவிட்டுள்ளது. நாட்டை பலவீனப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுவதையே இது காட்டுகிறது.
கவுரவ் பாட்டியா
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
காங்கிரஸ் கருத்து என்ன?
காங்கிரசின் ராபர்ட் வாத்ரா உட்பட பலர் பயங்கரவாத தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பேசிஉள்ளனர். பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டச் சொல்லும் காங்கிரஸ், முதலில் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்தி, தன் நிலைப்பாடு என்ன என்பதை கூற வேண்டும்.
ஸ்ரீகாந்த் ஷிண்டே
லோக்சபா எம்.பி., - சிவசேனா
மறுபரிசீலனை செய்யுங்கள்!
பாகிஸ்தான் நாட்டவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு, மனிதாபிமான ரீதியான கவலையை ஏற்படுத்தியுள்ளது. பலர், 30 - -40 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்து, இந்திய குடிமக்களை திருமணம் செய்து வாழ்கின்றனர். எனவே இந்த உத்தரவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி