தீயணைப்பு துறையில் 'கமாண்டோ படை'

தீயணைப்பு துறை தொடர்பாக, முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

புதிய நிலையங்கள்



திருவண்ணாமலை கோவில், பெரம்பலுார் வேப்பந்தட்டை, வேலுார் பள்ளிகொண்டா, விழுப்புரம் கண்டமங்கலம், கரூர் மாவட்டம் குளித்தலை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஆகிய இடங்களில், 16.80 கோடி ரூபாயில், புதிதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் அமைக்கப்படும்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திண்டுக்கல் மாவட்டம் பழனி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீயணைப்பு நிலையங்கள், 5.60 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும்

வாகனங்கள்



புதிதாக, 10 நீர்த்தாங்கி வண்டிகள். 15 சிறிய நுரை தகர்வு ஊர்திகள், 5 பெரும் தண்ணீர் லாரிகள், 700 மூச்சுக் கருவிகள், ஐந்து காற்று பிடிக்கும் கருவிகள், 50 நீட்டி சுருக்கும் ரப்பர் விசைப்படகுகள், 50 கூட்டு மீட்புக் கருவிகள், 10 ஜீப்புகள், 50 மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படும்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்; கடலுார் மாவட்டம், காட்டுமன்னார் கோவில்; திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்; நீலகிரி மாவட்டம், குன்னுார்; தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும்

மதுரை தீயணைப்பு நிலையம் மற்றும் தென்மண்டல துணை இயக்குநர் அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்டப்படும்

கோவையில், 72 பணியாளர் குடியிருப்புகள் கட்டப்படும்

தீயணைப்பு துறையில், திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட, மத்திய மண்டலத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தில் புதிய மண்டலம் உருவாக்கப்படும்

தீத்தொண்டு நாளில் வழங்கப்படும் சிறப்பு பணி பதக்கம், 12 ஆகவும், அண்ணா பதக்கம் எண்ணிக்கை, 20 ஆகவும் உயர்த்தப்படும்

தலா 25 தீயணைப்போரை கொண்ட, இரண்டு கமாண்டோ படைகளை உருவாக்க, பயிற்சி மற்றும் சிறப்பு உபகரணங்கள், ஒரு கோடி ரூபாயில் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement