குழந்தை பாதுகாப்பு குழுக் கூட்டம்

மதுரை; மதுரை மாநகராட்சி மண்டலம் 4ல் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் உதவி கமிஷனர் சாந்தி தலைமையில் நடந்தது.

மண்டல மருத்துவ அலுவலர் இனான்சிலின் மெர்சி, உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், சுகாதார அலுவலர் கோபால், கண்காணிப்பாளர் ஆனந்தம், குழந்தை பாதுகாப்பு ஆற்றுப்படுத்துனர் சோபனா, மேற்பார்வையாளர் லட்சுமி, தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், போதைப் பொருள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்வது, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர் ஏற்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement