தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு
மதுரை; மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நோய் எதிர்ப்பு திறனின் பிறவிக் குறைபாடுகள், முதன்மை நோய் எதிர்ப்பு குறைபாடு தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு நடந்தது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தை நல, குடும்ப நல டாக்டர்கள் பங்கேற்றனர்.
சிறுவயது குழந்தைகளிடம் கவனிக்காமல் விடப்படும் நோய் எதிர்ப்புத்திறன் சீர்கேடுகளை ஆரம்ப நிலையில் கண்டறிதல், சிகிச்சையளிப்பதில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றம் குறித்து 12 மருத்துவ நிபுணர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ரத்தவியல், எலும்பு மஜ்ஜை உறுப்புமாற்று சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறையின் தலைவர் காசி விஸ்வநாதன், இணை நிபுணர் வெங்கடேஸ்வரன் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறை முதுநிலை நிபுணர் அன்னபூரணி, இணை நிபுணர் அனிதா கலந்து கொண்டனர்.
இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள், நிபுணர்கள் குழுவின் விவாதம் நடந்தது. குழந்தைகளுக்கான ரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் துறை இதற்கான ஏற்பாடுகளை செய்தது.