மதுரை பனகல் ரோட்டில் தேவையின்றி நெரிசலை ஏற்படுத்துகிறார்களா? போலீசார் கமிஷனர் களஆய்வு செய்வாரா

மதுரை; இருவழிப்பாதையான மதுரை பனகல் ரோட்டை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் செல்ல இடைஞ்சலாக உள்ளதெனக் கண்டுபிடித்து ஒருவழிப்பாதையாக மாற்றிய போலீசார், ஒருபக்க ரோடு முழுவதையும் ஆக்கிரமிப்புக்கு அனுமதித்துள்ளதால் நெரிசலும் குறையவில்லை, போக்குவரத்தும் சீராகவில்லை.
நோக்கம் நிறைவேறவில்லை
அரசு மருத்துவமனைக்கு தினமும் 20 முதல் 30 முறை ஆம்புலன்ஸ் வருகிறது. இருவழிப் பாதையாக இருப்பதால் ஆம்புலன்ஸ் வந்து செல்ல இடையூறாக உள்ளதென போலீசார் இப்பகுதியை ஒருவழிப்பாதையாக மாற்றினர். சிம்மக்கல், கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள் நேரடியாக பனகல் ரோட்டை பயன்படுத்த முடியும். கலெக்டர் அலுவலகம், அண்ணாநகரில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவமனைக்கு முன்புற ரோட்டில் 'பேரிகார்டு' மூலம் தடுக்கப்பட்டு மார்ச்சுவரி வழியாக வைகை வடகரை ரோடு வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஒருவழிப்பாதையில் மட்டுமே வாகனங்கள் சென்ற நிலையில் துளி கூட போக்குவரத்து சீராகவில்லை. வழக்கம் போல வாகன நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ்கள் அலறிக் கொண்டே நின்றாலும் போலீசார் கண்டு கொள்வதே இல்லை.
ஆக்கிரமிப்புக்கு அனுமதி
தற்போது கோரிப்பாளையம் அருகே பாலம் வேலை நடப்பதால் அங்குள்ள ரவுண்டானாவில் இருவழி சிக்னலில் மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. சிம்மக்கல், செல்லுாரில் இருந்து வரும் வாகனங்கள் கோரிப்பாளையம் சிக்னலில் 5 நிமிடங்கள் வரை நிற்கவைக்கப்படுகின்றன. சிக்னல் கிடைத்த பின்னும் வாகனங்கள் சீராக பனகல் ரோட்டில் பயணிக்க முடியாத அளவு ஆட்டோக்கள் அடைத்து நிற்கின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனை எதிரே ரோட்டின் பாதியை அடைத்தவாறு டூவீலர்களை அனுமதிப்பதோடு 'பேரிகார்டு' வைத்து ரோட்டை மறைத்துள்ளனர் போலீசார்.
'பேரிகார்டை' ஒட்டி ஆட்டோக்கள் நோயாளிகள், உறவினர்களை ஏற்றுவதற்காக காத்திருக்கின்றன. ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புகளும் அகற்றப்படாததால் குறுகிய ஒருவழிப்பாதையில் நிமிஷக்கணக்கில் வாகனங்கள் நின்று செல்கின்றன. 100 மீட்டர் பனகல் ரோட்டை கடக்க குறைந்தது 5 நிமிடங்கள் ஆவதால் நிரந்தரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மருத்துவமனையை தாண்டிய பின் இடதுபக்க ரோடு முழுவதும் வேன், கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆட்டோ, கார், வேன்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்காகவே ரோடு ஒருவழியாக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. எத்தனை பாலங்கள் கட்டினாலும் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தால் வழக்கம் போல நெரிசல் ஏற்படும். தினமும் பனகல் ரோட்டை கடப்பதற்குள் வாகன ஓட்டிகள் படும் பாட்டை போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேரடியாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காணவேண்டும்.
மேலும்
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
-
மாநகராட்சி பெண் ஊழியர் லாரி மோதி பலி
-
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: நீதிபதி திட்டவட்டம்