பூமி அதிர்வுடன் பயங்கர வெடி சத்தம்; விளக்கம் பெற பேரூராட்சி தீர்மானம்
வடமதுரை; வடமதுரை பகுதியில் அடிக்கடி அதிர்வுடன் ஏற்படும் பயங்கர வெடிச்சத்தம் குறித்து தொடர்புடைய துறையிடம் இருந்து கலெக்டர் மூலம் விளக்கம் பெற பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடமதுரை பேரூராட்சி கூட்டம் தலைவர் நிருபாராணிகணேசன் (தி.மு.க.,)தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பத்மலதா முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் கணேசன் வரவேற்றார். 11வது, 2வது வார்டுகளில் ரூ.10.15 லட்சத்தில் குடிநீர் பணிகள், 4வது, 9வது வார்டுகளில் ரூ.10.15 லட்சத்தில் சிறுபாலத்துடன் வடிகால், நன்னிஆசாரியூரில் ரூ.10.25 லட்சத்தில் பேவர் பிளாக் ரோடு, முத்துநகரில் ரூ.3.30 லட்சத்தில் சிறுபாலத்துடன் வடிகால் வடமதுரை பகுதியில் அடிக்கடி மிக பயங்கரமான சத்தத்துடன் பூமி அதிரும் விதமாக கேட்கும் வெடிச்சத்தம் குறித்து கலெக்டர் மூலம் விளக்கம் பெறுதல், பேரூராட்சிக்குள் காலனி பெயர் உள்ளதை மாற்றம் செய்து பெயர் பலகை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளநிலை உதவியாளர் முரளிமோகன் நன்றி கூறினார்.