ரோடு சீரமைப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன் கோட்டையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பைபாஸ் ரோட்டில் சென்று திண்டுக்கல் செல்கின்றன. ஒட்டன்சத்திரம் ரோடும் பைபாஸ் ரோடும் இணையும் பகுதி மண்ரோடாக இருந்ததால் அடிக்கடி சேதமடைந்து மேடு பள்ளமாக மாறியது. இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பைபாஸ் ரோட்டில் திரும்புவதற்கு மிகவும் சிரமப்பட்டன.

கோடை மழை இப்பகுதியில் இருந்த பள்ளங்களை மழைநீரால் மறைத்து விட்டது. தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் செல்லும் போது விபத்து அபாயம் உள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த இரண்டு ரோடுகளையும் இணைக்கும் பகுதியில் உள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு சரிசமமாக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement