நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்; -உயர்நீதிமன்றம் அளித்த பாலியல் வழக்கு தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உ.பி., அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாலியல் சீண்டல் வழக்கில் வழங்கிய தீர்ப்பை கண்டித்தும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கக் கோரியும், சிறுமிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்ட திருத்தம் கோரி நேற்று ராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் வடகொரியா, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முருகானந்தம், இந்திய கம்யூ., ராமேஸ்வரம் நகர செயலாளர் செந்தில்வேல், நிர்வாகிகள் எம்.செந்தில், பிச்சை, ஜோதிபாசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement