விநாயகர் கோவிலில் அமுது படையல்
சேத்தியாத்தோப்பு; சின்னகுப்பம் வன்னிமரத்து விநாயகர் கோவிலில் அமுது படையல் விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னகுப்பம் வன்னிமரத்து விநாயகர் கோவிலில் அமுது படையல் விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டியவர்கள், வெள்ளாற்றில் இருந்து செடல் காவடி, பறவை காவடி, அலகு குத்துதல், பால்குடம் ஆகியவற்றுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பின், விநாயகருக்கு பால் அபிேஷகம் நடந்தது. சிறுதொண்ட நாயானாருக்கு அமுது படையல் செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement