சிறுமிக்கு தொல்லை; இளைஞர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத், 25; வெல்டிங் தொழிலாளி.

இவர், அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம், காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம், கடைவீதிக்கு சிறுமி வந்தபோது, தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி, சிறுமியை கட்டிப்பிடித்து வினோத் பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Advertisement