நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

1

புதுடில்லி: வரும் மே 4ம் தேதி நடக்க உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.


நாடு முழுதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் பொதுத் தேர்வு அவசியம். இந்த தேர்வை மத்திய அரசின் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2025-26ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுதும் 550 நகரங்களில், 5,000க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடக்கவுள்ளது.

இந்நிலையில், இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை என்டிஏ வெளியிட்டு உள்ளது. 04ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், உதவிக்கு, 011-40759000 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், neetug2025@nta.ac.in என்ற இமெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அந்த மையம் அறிவித்து உள்ளது.

Advertisement