'10 நாளுக்கு ஒருமுறைகுடிநீர் வினியோகம்'





கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி லோகாம்பாள் தலைமையில் நடந்தது. அதில், 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து, தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள், '10 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர், வலசக்கல்பட்டி ஏரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் மக்களிடம், பதில் அளிக்க முடியவில்லை' என்றனர். அதற்கு லோகாம்பாள், 'சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என்றார்.

அ.தி.மு.க., கவுன்சிலர் இளவரசு, 'தி.மு.க., நிர்வாகிகள் சிலர் வைத்துள்ள வணிக வளாக கடைகளுக்கு, 3 ஆண்டாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். அரசு உத்தரவை மீறி கவுன்சிலரின் கணவர் பெயரில் கடை வைத்துள்ளனர். ஆனால் அந்த கடைகள், பெயர் மாற்றம் செய்யும்படி, 3 செயல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என்றார்.
செயல் அலுவலர் ஜனார்த்தனன், 'ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அதேபோல் வீரகனுார் டவுன் பஞ்சாயத்தில் நடந்த கூட்டத்தில், 27 தீர்மானங்கள், தெடாவூர் டவுன் பஞ்சாயத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement