தனியார் பஸ் ஓட்டுனர்களிடையே டைமிங் பிரச்னையால் மோதல்




அரூர்::அரூரில், டைமிங் பிரச்னையால், 3 தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், அரூரிலிருந்து, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை சேலத்திலிருந்து, அரூருக்கு, 9:55 மணி, 10:10 மற்றும், 10:17 மணிக்கு என, 3 தனியார் பஸ்கள் புறப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக, 12:00 மணிக்கு, அரூர் பஸ் ஸ்டாண்ட் வந்தன. அங்கு, சேலத்திலிருந்து புறப்படும் டைமிங் பிரச்னையால், 3 பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு வரை சென்றது. இதில், ஒரு பஸ்சின், 2 பக்கவாட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பின், பஸ்களை இயக்காமல் பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டனர்.
அங்கு வந்த அரூர் போலீசார், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம், இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்ததுடன், 3 பஸ்களையும் ஸ்டேஷனுக்கு எடுத்து வரக்கூறினர். அங்கு, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement