நாகர்கோவில் - - காச்சிகுடா ரயில் ஜூன் வரை நீட்டிப்பு

விருதுநகர்:கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நாகர்கோவில் - - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களை ஜூன் வரை நீட்டிப்பு செய்து தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

வெள்ளி தோறும் இரவு 7:45 மணிக்கு காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10:30 மணிக்கு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (07435) ஜூன் 6 வரை, மறுமார்க்கம் ஞாயிறு தோறும் அதிகாலை 12:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள்(திங்கள்) காலை 6:30 மணிக்கு காச்சிகுடா செல்லும் சிறப்பு ரயில் (07436) ஜூன் 8 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

இரு ரயில்களும் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக செல்லும். இவற்றுக்கான முன்பதிவு துவங்கியது.

Advertisement