சார்-பதிவாளர் அலுவலக கழிப்பறையில் ரூ.3 லட்சம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு சார் - பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மதியம் தனிப்படை போலீசார் திடீர் சோதனை செய்தனர். பணிகள் நிறுத்தப்பட்டு கதவு அடைக்கப்பட்டது. பணியாளர்கள் மற்றும் சார்-பதிவாளர் உமா மகேஸ்வரியின் டேபிள்கள், கழிப்பறை என, அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை செய்தனர்.

போலீசாரை கண்டதும் வெளியில் நின்றிருந்த புரோக்கர், எழுத்தர் ஆகியோர் ஓடினர். சோதனையில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து, கவரில் சுற்றப்பட்டு இருந்த 3 லட்சம் ரூபாய், அலுவலகத்தில் இருந்த இரு நபர்களிடம் இருந்து 1.53 லட்சம் ரூபாய் என மொத்தம் 4.53 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

Advertisement