மோதல்கள் இருக்கும் போது ஜனநாயகம் செழிக்காது: துணை ஜனாதிபதி பேச்சு

5

லக்னோ: '' அனைத்து அரசியல் அமைப்புகள், தங்களுக்கான வரம்புக்குள் செயல்படும் போது மட்டுமே, அத்தகைய மரியாதை சாத்தியமாகும். மோதல்கள் இருக்கும் போது ஜனநாயகம் செழிக்காது'', என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசினார்.




உ.பி., கவர்னர் ஆனந்திபெட் படேல் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு அரசியல்சாசன அமைப்புகளுக்கும் வரையறுக்கப்பட்ட பங்கு உள்ளது. அதில், எந்த ஒரு அமைப்பும் மற்றொரு அமைப்பின் பொறுப்புகளில் தலையிடக் கூடாது. அரசியலமைப்பை அதன் உண்மையான உணர்வில் இருந்து நாம் மதிக்க வேண்டும்.


மிகவும் ஆபத்தான சவால்கள் உள்ளே இருந்து வருகின்றன. அவற்றை நாம் வெளிப்படையாக விவாதிக்க முடியாது. இவற்றுக்கு எந்த ஒரு தர்க்க ரீதியான அடிப்படையும் இல்லை. தேசிய வளர்ச்சியுடன் எந்த தொடர்பும் இல்லை. மேலும் அவை நிர்வாகத்தில் வேரூன்றி உள்ளன. இதுபோன்ற சவால்களை நான் தனிப்பட்ட முறையில் தாங்கிக் கொண்டேன்.


அனைத்து அரசியல் அமைப்புகளும் ஒன்றை ஒன்று மதிக்க வேண்டியது நமது கடமை. அந்த அமைப்புகள், தங்களுக்கான வரம்புக்குள் செயல்படும் போது மட்டுமே, அத்தகைய மரியாதை சாத்தியமாகும். மோதல்கள் இருக்கும் போது ஜனநாயகம் செழிக்காது.


சட்டசபைகளால் தீர்ப்புகளை வழங்க முடியாது. அது நீதித்துறையின் வரம்பில் வருகிறது. அதேபோல், நீதித்துறையும் தவிர்க்க வேண்டும். நீதித்துறை மீது எனக்கு மரியாதை உண்டு. நம்மிடம் சிறந்த நீதிபதிகள் உளள்னர் எனக் கூற முடியும். ஆனால், ஒரு கூட்டு மற்றும் ஒற்றுமையான அணுகுமுறை தேவை என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.

Advertisement