இந்தியாவுக்கு இரண்டாவது இடம்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில்

அம்மான்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில் 15 தங்கம் உட்பட 43 பதக்கம் வென்ற இந்தியா 2வது இடம் பிடித்தது.
ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 11 தங்கம், 3 வெள்ளி, 11 வெண்கலம் என, 25 பதக்கம் கிடைத்தது. நேற்று 17 வயதுக்குட்பட்டோருக்கான பைனல் நடந்தது.
பெண்களுக்கான 46 கிலோ பிரிவில் இந்தியாவின் குஷி சந்த், மங்கோலியாவின் அல்தான்சுல் மோதினர். அபாரமாக ஆடிய குஷி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
மற்ற எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் அஹானா சர்மா (50 கிலோ), ஜன்னத் (54 கிலோ), அன்ஷிகா (80+ கிலோ) வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றனர். சிம்ரன்ஜீத் கவுர் (60 கிலோ), ஹர்சிகா (63 கிலோ) வெள்ளி வென்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் கிடைத்தது.
ஆண்களுக்கான 80 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் தேவன்ஷ் 0-5 என கஜகஸ்தானின் ரஸ்டம்பெக்கிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். ஆண்கள் பிரிவில் ஒரு வெள்ளி, 6 வெண்கலம் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 4 தங்கம், 3 வெள்ளி, 11 வெண்கலம் கிடைத்தது.
இத்தொடரில் 15 தங்கம், 6 வெள்ளி, 22 வெண்கலம் என, 43 பதக்கம் கைப்பற்றிய இந்தியா 2வது இடத்தை கைப்பற்றியது. கஜகஸ்தான் முதலிடம் பிடித்தது.
மேலும்
-
பிளஸ் 2 மாணவர் போக்சோவில் கைது
-
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் * பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
-
'நீட்' வினாத்தாள் கசிந்ததாக புரளி வலைதள கணக்குகள் மீது நடவடிக்கை
-
சூறாவளி காற்றுடன் கனமழை: வெள்ளக்காடான கிருஷ்ணகிரி
-
புறக்காவல் நிலையத்தை ஆக்கிரமித்த பேனர்கள்
-
ராமேஸ்வரத்தில் 'டிரெக்கிங்' வசதியுடன் 125 ஏக்கரில் புதிய சூழலியல் சுற்றுலா