சாலையில் உலா வரும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் திக்... திக்... பயணம்

கொண்டஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டஞ்சேரி ஊராட்சி. இப்பகுதியிலிருந்து திருப்பாச்சூர் செல்லும் நெடுஞ்சாலை வழியே தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
நெடுஞ்சாலையில் கால்நடைகள் பல இடங்களில் இளைப்பாறுகின்றன.
இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருவதோடு விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உத்தரவிட்டும் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்விதநடடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement