நீதிபதிகளுக்குபிரிவு உபசார விழா





தேன்கனிக்கோட்டைகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்று விழா மற்றும் பணி மாறுதலில் செல்லும் நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா நேற்று நடந்தது. வக்கீல் சங்க தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் அரவிந்தகுமார் வரவேற்றார். துணைத்தலைவர் கங்காதரன், பொருளாளர் சீனிவாசன், நுாலகர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.


பணி மாறுதலில் செல்லும் சார்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் மற்றும் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் ஆகியோரை, வக்கீல் சங்க நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக, வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். நீதிபதி திருமலை, அரசு வக்கீல் ரவீந்திரநாத், மூத்த வக்கீல்கள் ராம்பிரசாத், ராம் பிரகாஷ், சதீஷ்குமார், வேதபிரகாஷ், சாரதா உட்பட பலர்
பங்கேற்றனர்.

Advertisement