கடிதம் எழுதும் போட்டிவென்றவர்களுக்கு பரிசு
தர்மபுரிஅஞ்சல் துறை சார்பாக நடந்த கடிதம் எழுதும் போட்டியில், மாநில அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பாக, 'தாய் அகார்' கடிதம் எழுதும் போட்டி தேசிய அளவில் நடந்தது. டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் என்ற கருப்பொருளில் கடந்த, 2024 செப்., மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், தர்மபுரி அஞ்சல் கோட்டம் சார்பாக, 1,042 கையால் எழுதப்பட்ட கடிதங்கள் ஏற்கப்பட்டு, முதன்மை அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், தர்மபுரி -அடுத்த தோக்கம்பட்டியை சேர்ந்த வனிதா, 18, மாநில அளவில் முதலிடம் பெற்றார். தர்மபுரி- அவ்வை நகரை சேர்ந்த அறிவொளி, 18, மாநில அளவில், 2ம் இடம் பெற்றார். இதில், முதல் பரிசு, 25,000 ரூபாய்-, 2ம் பரிசு, 10,000 ரூபாய்க்கான- காசோலை மற்றும் சான்றிதழை, தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேற்று வழங்கி பாராட்டினார்.