வேடசந்தூரில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

வேடசந்தூர்: வேடசந்தூர் வட்டார ஜேசிபி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கூடுதல் வாடகை கேட்டு 3 நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
வேடசந்தூர் பகுதியில் 60 க்கும் மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்கள் வாடகைக்கு இயங்குகின்றன. கடந்த 2021 முதல் மண் அள்ளும் இயந்திர வாகன வாடகையில் மாற்றமில்லாமல் உள்ளது. பொதுமக்களும், நாள் முழுவதும் ஓய்வின்றி எடுக்க கூறும் ஒப்பந்ததாரர்களும் வாடகையை உயர்த்தி தர மறுக்கின்றனர். வேடசந்தூர் வட்டார ஜே.சி.பி., உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் முதல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரத்து 500 ரூபாயும், அதற்கு மேல் எடுத்தால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.ஆயிரத்து 400 ம், டிரைவர் படியாக ரூ.500 ம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, ஐம்பதுக்கு மேற்பட்ட வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடங்கியது அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்: 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
-
என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் மன்னர்களாக உருவாகினர்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
-
நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா? சூசக பதில் அளித்த நயினார்
-
ஜாதியை பற்றி தி.மு.க., பேசக்கூடாது: நிர்மலா சீதாராமன்
-
கேரளாவில் ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களை பார்த்து கற்றுக் கொண்டேன்: பிரதமர் மோடி
Advertisement
Advertisement