வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி





தர்மபுரிதர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவரது மனைவி பாஞ்சாலி. தம்பதிக்கு, 2 மகள்கள் மற்றும், 7 வயதில் ஹரிராமன் என்ற மகன் இருந்தனர். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு சென்னப்பன் கொட்டாய் விவசாய நிலத்தில், தண்ணீர் தேக்கி வைத்திருந்த தொட்டியில் சிறுவன் ஹரிராமன் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானார். மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

பென்னாகரம் அடுத்த, அஜ்ஜம்பட்டியை சேர்ந்தவர் நீலகண்டன் 36. இவருக்கு, 14 வயதில் பிரசாந்த் மற்றும், 12 வயதில் ஹரி கிருஷ்ணன் என இரு மகன்கள். இதில், ஹரிகிருஷ்ணன் கடந்த, 28 அன்று மாலை, 3:00 மணிக்கு பூச்சூர் அருகே உள்ள, காவிரியாற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, நீரில் மூழ்கினார்.
உடனடியாக, அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, ஏரியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிகிருஷ்ணன் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஏரியூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement