சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்

பழநி : பழநி கலையம்புத்துார் அக்ரஹாரத்தில் பிராமண மகா சபா மண்டபத்தில் சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெற்றது.

பழநி கலையம்புத்துார் அக்ரஹாரத்தில் பிராமண மகா சபா மண்டபத்தில் உலக மக்கள் நலம் பெற சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெற்றது. காலை 6:00 மணி முதல் விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாஹவாசனம், ஆவஹந்தி ஹோமம், ருத்ர ஏகாதசி, வஸோர்தாரா ஹோமம் நடந்தது.

யாகத்தில் வைக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் வீதி உலா எடுத்துவரப்பட்டு ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement