பெண்ணிடம் தாலி பறிப்பு: மர்மநபருக்கு வலை

புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சேர்ந்தவர் தமிழேந்தி, 44. இவரது கணவர் இளங்கவி. இவர் கடந்த 28ம் தேதி அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டார். தமிழேந்தி வீட்டில் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு தமிழேந்தி வீட்டில் துாங்கியிருந்த போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் தமிழேந்தி அணிந்திருந்த 3 சவரன் தாலி ஜெயினை அறுத்துக் கொண்டு தப்பியோடினார். அவர் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement