அங்கன்வாடி பணியாளர் காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்ட அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் உமாராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மல்லிகா, சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது 125 மட்டுமே நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
நீண்ட காலம் பணி செய்யும் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 15க்குமேற்பட்ட குழந்தைகள் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்டிப்பாக ஒரு பணியாளர், உதவியாளரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான காரணம் தெரியவில்லை: சொல்கிறார் கார்கே
-
பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் சந்திப்பு!
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!