மரக்கன்று நடும் விழா

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மரம் நடும் விழா நடந்தது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை சட்டப்பணிகள் குழு சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா தலைமை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, குற்றவியல் நீதிபதி முத்துஇசக்கி மரக்கன்றுகளை நட்டனர்.

வக்கீல்கள் சங்க செயலாளர் லாவண்யா, பொருளாளர் பாலாஜி, மூத்த வக்கீல்கள் கோர்ட் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தன்னார்வ பணியாளர் சேகர் செய்தார்.

Advertisement