பாதை தகராறில் இருவர் கொலை ராணுவ வீரர் தாயுடன் கைது

உத்தமபாளையம்,:நடைபாதை தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டனர். இதில், ராணுவ வீரர், அவரது தாயை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி, மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சுதா, 52.
இவர்கள், வீட்டருகே வசிக்கும் ராஜேந்திரன் குடும்பத்தினருக்கும், இவர்களுக்கும் நீண்ட காலமாக பாதை பிரச்னை இருந்துள்ளது. சுந்தரை பார்க்க மாமனார் முத்து மாயன், நேற்று முன்தினம் காமயகவுண்டன்பட்டியில் இருந்து அனுமந்தன்பட்டி வந்தார்.
ராணுவத்தில், ஜம்மு - காஷ்மீரில் ஹவில்தாராக உள்ள ராஜேந்திரன் மகன் பார்த்திபன், 32, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பாதை பிரச்னை காரணமாக பார்த்திபன் நேற்று முன்தினம் இரவு சுந்தர் வீட்டின் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பார்த்திபன் கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டியதில் முத்துமாயன் அதே இடத்தில் பலியானார்.
பலத்த காயமடைந்த சுந்தர், தேனி மருத்துவமனையில் இறந்தார். பலத்த காயத்துடன் சுதா சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜேந்திரன் டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதால் கைது செய்யப்படவில்லை. பார்த்திபன், விஜயாவை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!