கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடக்குமா மவுனம் சாதிக்கும் தொல்லியல் துறை
கீழடி:கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடைபெறுவதற்கான எந்த முயற்சியும் தொல்லியல் துறை சார்பில் எடுக்கப்படாத நிலையில் தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் கீழடி வந்து திரும்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் வைகை நதிக்கரை நாகரிகத்தை கண்டறியும் பொருட்டு மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், ராஜேஷ், வேதாச்சலம் ஆகியோர் தலைமையில் 2015ல் அகழாய்வு தொடங்கியது. மூன்று கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம், உறைகிணறுகள், தந்த தாயக்கட்டை பானை குறியீடுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
அதன்பின் தமிழக தொல்லியல் துறை கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வை தொடங்கியது. ஆனாலும் கீழடி, கொந்தகையில் மட்டுமே அகழாய்வு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வந்தன. அகழாய்வு பணி ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை நடத்தப்படுவது வழக்கம், ஆனால் சில ஆண்டுகளாக தமிழக தொல்லியல் துறை பெயரளவில் அகழாய்வு பணிகளை நடத்தி வருவதாக வரலாற்று ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
2024 ஜூன் 18ல் தொடங்கிய அகழாய்வில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்ட நிலையில் ஆறே மாதங்களில் நவம்பருடன் நிறுத்தப்பட்டது. மீண்டும் அகழாய்வு பணிகள் நடக்கவே இல்லை. டிசம்பரில் கீழடி வந்த தொல்லியல் ஆணையர் சிவானந்தம் 2025 மார்ச் வரை 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் என்றார். ஆனால் அகழாய்வு பணிகள் நடைபெறவே இல்லை. 11ம் கட்ட அகழாய்வு பணிகள் நடப்பதற்கு இடமும் இன்று வரை தேர்வு செய்யப்படவே இல்லை.
11ம் கட்ட அகழாய்வு நடைபெறுமா இல்லையா என்றும் தொல்லியல் துறை அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஆணையர் சிவானந்தம் கீழடிக்கு மே 1ம் தேதி வந்து சென்றுள்ளார். தமிழக தொல்லியல் துறையினர் திறந்த வெளி அருங்காட்சியக பணிகளில் தீவிரமாக உள்ளனர். திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் இந்தாண்டு டிசம்பர் வரை நடைபெறும். திறத்ந வெளி அருங்காட்சியகம் நான்கரை ஏக்கரில் 914 சதுர மீட்டரில் அமைய உள்ளது. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகள் குறித்து பொதுமக்களுக்கு உரிய தகவல் அளிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!