தேன்கனிக்கோட்டை மின்வாரிய கோட்டம் துவக்கம்

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய கோட்டத்தில், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய இரு தாலுகா இருந்தன. பொதுமக்கள், விவசாயிகள் புதிய மின் இணைப்பு பெறுவது, புதிய மின்சார மீட்டர் மற்றும் மின்சாரம் சார்ந்த புகார்களை தெரிவிப்பது போன்றவற்றுக்கு, ஓசூர் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.


அதனால் காலவிரயம் ஏற்பட்டது. அதை தவிர்க்கும் வகையில், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவை தனியாக பிரித்து, தேன்கனிக்கோட்டை மின்வாரிய கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தேன்
கனிக்கோட்டையில் மின்வாரிய கோட்ட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், கிருஷ்ணகிரி மின்
வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) கவிதா, தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் ஆகியோர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர்.
செயற்பொறியாளர்கள் பழனி (தேன்கனிக்கோட்டை), இந்திரா (போச்சம்பள்ளி), உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement