மனைவி, கள்ளக்காதலரை கொன்ற கணவர் போலீசில் சரண்
கலபுரகி: கையும், களவுமாக சிக்கிய மனைவியையும், அவரது கள்ளக்காதலரையும் கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார்.
கலபுரகி மாவட்டம், ஆளந்தா தாலுகாவின் மாதனஹிப்பரகா கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீமந்தா, 26. இவருக்கும், ஸ்ருஷ்டி, 22 என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. தம்பதி அன்யோன்யமாக இருந்தனர்.
இதற்கிடையே ஸ்ருஷ்டிக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் காஜப்பா, 23,வுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், காஜப்பாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ஸ்ரீமந்தா நேற்று முன் தினம் அதிகாலை, வெளியூருக்கு சென்றிருந்தார். கணவர் வர தாமதமாகும் என, நினைத்த ஸ்ருஷ்டி, நேற்று முன் தினம் இரவு, காஜப்பாவை தன் வீட்டுக்கு வரவழைத்தார். இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
அப்போது எதிர்பாராமல், வெளியூரில் இருந்து வீடு திரும்பிய ஸ்ரீமந்தா, இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கோபமடைந்த அவர், கத்தி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் மனைவியையும், அவரது காதலரையும் சரமாரியாக தாக்கி கொலை செய்தார். அதன்பின் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.
அவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
மேலும்
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!