20 மாவட்டங்களில் 1208 ஏக்கர் வீட்டுவசதி வாரியம் விடுவிப்பு
சென்னை:குடியிருப்பு திட்டங்களுக்காக, தனியாரிடம் இருந்து வாரியம் நிலம் கையகப்படுத்துகிறது. பெரும்பாலான இடங்களில், எதிர்கால திட்டங்களை கருத்தில் வைத்து, நிலம் கையகப்படுத்துவதற்கான, 'நோட்டீஸ்' மட்டும் அளிக்கப்பட்டு இருக்கும். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் விடுபட்டு இருக்கும்.
அந்த நிலம், அதன் உரிமையாளர்களால் வேறு நபர்களுக்கு விற்கப்பட்டு, வாங்கியவர்கள் வீடு கட்டி குடியிருந்து வருவர். இத்தகைய சூழலில் உள்ள நிலத்தை விடுவிக்க, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.
இந்த வகையில், முதற்கட்ட நோட்டீஸ்கள் அளிக்கப்பட்ட, 5,910 ஏக்கரில், 3,710 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, 1,208 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
சென்னை, சேலம், கோவை, மதுரை கோட்டங்களில், 20 மாவட்டங்களைச் சேர்ந்த, 53 கிராமங்களில் உள்ள, 1,208 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு உள்ளது. அதன் உரிமையாளர்களுக்கு இதற்கான கடிதங்கள் அனுப்பப்படும். இதனால், நில விற்பனை, கட்டுமானம், வங்கிக்கடன் போன்ற தேவைகளுக்கு, வீட்டுவசதி வாரியத்திடம் தடையின்மை சான்று கேட்டு வர வேண்டியதில்லை.
சர்வே எண் வாரியாக விடுவிக்கப்பட்ட நில விபரங்கள் அடங்கிய அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.
மேலும்
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது
-
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: மே 5, 6 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
-
இந்தியா போர் தொடுத்தால்.., பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் சொன்னது என்ன ?
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!