துப்பாக்கி சுடுதல்: கிரண் ஜாதவ் 'தங்கம்'

புதுடில்லி: துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில், இந்திய கடற்படை வீரர் கிரண் ஜாதவ் தங்கம் வென்றார்.
டில்லியில், குமார் சுரேந்திர சிங் நினைவு தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் தமிழகத்தின் ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ் (634.6 புள்ளி), இந்திய கடற்படை அணியின் கிரண் அங்குஷ் ஜாதவ் (633.7), நிராஜ் குமார் (632.8) 'டாப்-3' இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய கிரண் ஜாதவ், 251.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்திய ராணுவ அணியின் விவேக் சர்மா (250.1 புள்ளி), விஷால் சிங் (230.1) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். தமிழக வீரர் ஸ்ரீ கார்த்திக் சபரி ராஜ் (165.4 புள்ளி) 6வது இடம் பிடித்தார்.
ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் கிரண் ஜாதவ், நிராஜ் குமார், அஜய் மாலிக் அடங்கிய இந்திய கடற்படை அணி (1894.3 புள்ளி) முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. அடுத்த இரு இடங்களை மஹாராஷ்டிரா (1886.1), ஹரியானா (1885.4) அணிகள் கைப்பற்றின.
மேலும்
-
மிருகக்காட்சி சாலையில் 'மக்காவ் கிளி' எஸ்கேப்
-
முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணை, நிதி வரவில்லை
-
ஒரு கோடி ரூபாய் மோசடி வங்கி அதிகாரி கைது
-
விதவிதமான பொய்களை சொல்லி ரூ.1.56 கோடி சுருட்டிய 6 பேர் கைது
-
'டயாலிசிஸ்' நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு
-
நட்டாவுக்கு குண்டு துளைக்காத வாகனம் தரப்பட்டது: டி.ஜி.பி.,