குத்துச்சண்டை 18 கிளப் அணி வீரர்கள் பங்கேற்பு
சென்னை, மில்லத் குத்துச்சண்டை அகாடமி மற்றும் சில்வர் குத்துச்சண்டை அகாடமி இணைந்து, திப்பு சுல்தான் நினைவு குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகின்றன.
கோபாலபுரம், எஸ்.டி.ஏ.டி., குத்துச்சண்டை அகாடமியில் நேற்று முன்தினம் துவங்கிய இப்போட்டியில், சென்னை மண்டலத்தின் 18 கிளப் அணிகளைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
போட்டி சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர், ஆண்கள், பெண்கள் என, ஆறு பிரிவாக நடைபெறுகிறது.
இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது.
வெற்றி பெறுவோருக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement