சிவகங்கை அருகே சோகம்: வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர் குடும்பத்துடன் விபத்தில் பலி

9

சிவகங்கை; சிவகங்கை அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பூவந்தியில் இருந்து மதுரைக்கு பைக் ஒன்றில் பொன்ராஜ் (30) என்பவர் தமது மனைவி பிரதிபா (27), குழந்தை அனுசியா (3) ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார்.


மதுரை - சிவகங்கை ரோட்டில் நாட்டார்மங்கலம் விலக்கு என்ற இடம் வந்த போது காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற பொன்ராஜ், மனைவி பிரதிபா, குழந்தை அனுசியா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


உயிரிழந்த மூன்று பேரும் பூவந்தி அருகே ஏனாதியை சேர்ந்தவர்கள். பொன்ராஜ் வெளி நாட்டில் பணிபுரிந்தவர். அண்மையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த அவர், குடும்பத்துடன் விபத்தில் சிக்கி பலியானதை அறிந்து கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Advertisement