புகார் பெட்டி
மேம்பாலம் அமைக்கப்படுமா?
ரோடு மாமாந்துாரிலிருந்து ஆற்று மாமாந்துார்இடையே கோமுகி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.
அறிவழகன், ரோடு மாமாந்துார்
கழிவுநீர் கலப்பால் சிக்கல்
கள்ளக்குறிச்சி கோமுகி ஆறு சித்தேரிதென்கீரனுார் ஏரி போன்ற நீர் நிலைகளில் நகரப்பகுதியின் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.
கருணாகரன், கள்ளக்குறிச்சி
அரசு பஸ் சேவை துவங்கப்படுமா?
கள்ளக்குறிச்சியிலிருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ் சேவை இல்லை. அதனால் விரைந்து சேவை துவக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வினோத், சின்னசேலம்
காற்று மாசுபாடு
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் அந்தந்த பகுதிகளிலேயே கொட்டி தீ வைத்து எரிக்கப்படுவதால், சுகாதார சீர்கேடும், காற்று மாசும் ஏற்படுகிறது.
கண்ணபிரான், கள்ளக்குறிச்சி
இடம்பெயர்வு தடுக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி நகரிலிருந்து பெரும்பாலான மாவட்ட அலுவலகங்கள் வெளியூர்களுக்கு இடம் பெயர்வதை தடுக்க வேண்டும்.
சீனிவாசன், கள்ளக்குறிச்சி
வழிகாட்டி பலகை இல்லாததால் அவதி
சின்னசேலம் சேலம் பிரதான சாலையில் இருந்து, ரயில் நிலையம் செல்லும் வழியில் வழிகாட்டி பலகை வைக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
வெங்கட்ராமன், சின்னசேலம்
ஒலிபெருக்கியால் தொல்லை
சின்னசேலம் நகரப்பகுதி சாலையோரங்களில் வாகனங்களில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒலி பெருக்கியில் ஓயாமல் ஓசை எழுப்புவதால் அப்பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
தேவேந்திரன், சின்னசேலம்
மேலும்
-
புதிய ஐ.எம்.எப்., செயல் இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்; இவர் யார் தெரியுமா?
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி