பள்ளி மாணவிகள் 2 பேர் மாயம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மாயமான, இரு பள்ளி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் லாவண்யா,15; இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்,10ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல, ஏமப்பேர், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகள் சந்தியா,14; அதே பகுதி அரசு உயர்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த, 2 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement