பைக் மோதி மூதாட்டி பலி

சின்னசேலம்,; கள்ளக்குறிச்சி அருகே, பைக் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சன் மனைவி வெள்ளையம்மாள், 75; இவர் நேற்று காலை 6:00 மணிக்கு, தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி - சேலம் பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது காலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் மகன் கார்த்தி, 26; என்பவர் சின்னசேலத்தில்,

இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரது பைக் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement