அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரன், 47. பெற்றோர் இறந்த நிலையில் இவருக்கு திருமணமாக வில்லை. தனியாக வசித்து வந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ராஜேஷ்வரன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது. உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement