பெரியகயப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் சீரமைக்க வலியுறுத்தல்
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
திரவுபதி அம்மன் கோவில் எதிரே கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வந்தது. கிராம நிர்வாக அலுவலகம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
பராமரிப்பு இன்றி நாளடைவில் கட்டடத்தில் சிமெண்ட் கான்கிரிட் உதிர்ந்து சேதமடைந்ததால் மழைக்காலங்களில் கட்டடத்தின் உள்ளே மழைநீர் ஒழுகியது.
மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் மின்சார வசதி இல்லாததால், தற்போது அரசு பள்ளி வளாகத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது.
அதிகாரிகள், ஆய்வு செய்து, சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement