வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த மாதம்பதி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி, 50. இவர் கடந்த ஏப்., 25ல் வீட்டை பூட்டி விட்டு, கொடமாண்டப்பட்டியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு, தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர் நகை திருடி சென்றுள்ளார். இது குறித்து வள்ளி அளித்த புகார்படி, மத்துார் போலீசார் விசாரித்து, தர்மபுரி மாவட்டம், கொட்டாவூர் நாயக்கனுாரை சேர்ந்த மணிமாது, 55, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த இரண்டரை பவுன் நகையை மீட்டு, வள்ளியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement